Oct 13

காந்தி கொலையால் ஆதாயம் பெற்றது காங்.: உமா சர்ச்சை பேச்சு

காந்தி கொலையால் காங். அதிகம் ஆதாயம் அடைந்ததாக உமாபாரதி கூறினார்.

குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் பானஸ்கந்தா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ. மூத்த தலைவர் உமா பாரதி கலந்து கொண்டார்.

அப்போதுஅவர் கூறியது, ! மகாத்மா காந்தி கொலையால் பாதிக்கப்பட்டது, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜன சங்கம் தான்; ஆனால் அதிக பலன் அடைந்தது காங்கிரஸ்; ஏனெனில், சுதந்திரத்துக்கு பின், காங்கிரசை கலைத்துவிடும்படி, மகாத்மா காந்தி கூறினார். அவர் கொலை செய்யப்பட்டதால், காங்., கலைக்கப்படவில்லை. அப்படி பார்த்தால் காந்தி கொலையால் பெருமளவு ஆதாயம் அடைந்தது காங். என்றார்.