Apr 23

யாழ் துன்னாலை பகுதியில் குழு மோதல்; 12 பேர் காயம்

யாழ் வடமராட்சி   துன்னாலை கிழக்கு வேம்படிப் பகுதியில் நேற்று (21) மாலை   இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 12 பேர் காயமடைந்தனர். நெல்­லி­ய­டிப் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட துன்­னாலை வேம்­ப­டிச் சந்­திப் பகு­தி­யில்  பிறந்­த­நாள் கொண்­டாட்ட நிகழ்வொன்றின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

குறித்த நிகழ்வில், வட­ம­ராட்சி துன்­னா­லை­ பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பெரும் பதற்­றம் ஏற்­பட்­டுள்ளது. இரு குழுக்களாக  பிரிந்து அவர்­கள் அங்கு  மோத­லில் ஈடு­பட்­டுள்ளனர்.
 
இந்த தாக்குதலுக்கு, சுமார்  500 இற்­கும் மேற்­பட்ட கண்­ணா­டி­ சோடாப் போத்­தல்­கள், கற்­கள் போன்­ற பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், சிலர்  வாள்­கள் மற்­றும் கம்­பி­க­ளை­ வைத்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.
 
இதன் போது அங்கு  பெரும் பதற்­றம் ஏற்­பட்­டுள்ளதுடன், சம்பவ இடத்­துக்கு பொலி­ஸார் வருவதை அறிந்த குறித்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
 
இதன் போது இரு குழுக்களிலும்  படு­கா­ய­ம­டைந்த 7 பேர்  மந்­திகை வைத்தியசாலையிலும், 4 பேர் பருத்திதுறை  வைத்­தி­ய­சா­லை­யிலும் சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளில் ஒரு­வர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டுள்ளார்.
 
இந்நிலையில் சம்­பவ இடத்­தி­லி­ருந்து வாள், கம்­பி­கள் மற்­றும் உடை­யாத சோடாப் போத்­தல்­கள் போன்றவை பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்­டன. மோதல் இடம்­பெற்ற பகுதியிலுள்ள வீதி­யில் கண்­ணா­டி­யி­லான சோடாப் போத்­தல்­கள் உடைக்­கப்­பட்டு வீதி, கண்ணாடித் துண்­டுகளால் நிரம்பிக் காணப்பட்டது.
 
இதன் காரணமாக பொலி­ஸா­ரின் வாக­ன சில்லு ஒன்­று சேதமடைந்து காற்று போனமை குறிப்பிடத்தக்கது. இம்மோதலால் பாதிக்கப்பட்ட  அந்த வீதியை  பொலி­ஸார் அறி­வு­றுத்­த­லில் நேற்­றி­ரவு  துப்­ப­ரவு செய்­யும் பணி­கள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த தாக்குதலை தொடர்ந்து  நெல்­லி­யடி  பருத்­தித்­துறை மற்­றும் வல்­வெ­டித்­துறை பொலி­ஸார் இணைந்து நேற்று இரவு முழு­வ­தும் மோதல் இடம்­பெற்ற பகு­தி­யில் ரோந்து பணி­யில் ஈடு­பட்­ட­னர். நேற்று நள்­ளி­ரவு 12 மணி­வரை சந்­தே­க­ந­பர்­கள் எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. பொலி­ஸார் தொடர்ந்து தேடு­தல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.