Oct 12

ஹோன்டா CBR 650F இந்தியாவில் வெளியானது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஹோன்டா நிறுவனத்தின் CBR 650F இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா பைக் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

 ஹோன்டா நிறுவனத்தின் புதிய CBR 650F இந்தியாவில் வெளியானது. புதிய ஹோன்டா CBR 650F விலை இந்தியாவில் ரூ.7.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹோன்டா மாடலில் அதிகப்படியான காஸ்மெடிக் மாற்றங்களும், சில மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2017 ஹோன்டா CBR 650F மாடலில் முந்தைய மாடலை போன்ற வடிவமைப்பு கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த தோற்றம் அழகாக காட்சியளிக்கிறது. ஹோன்டா CBR 1000 RR மாடலை சார்ந்த உருவாக்கப்பட்டுள்ள CBR 650F தோற்றம் கூர்மையாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ளது.

புதிய மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப் முற்றிலும் வித்தியாசமாக காட்சியளித்தாலும், வடிவமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதனை பொருத்தியுள்ள விதம் இதனை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறது. மில்லினியம் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் என இரண்டு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

2017 ஹோன்டா CBR 650F மாடலில் லிக்விட்-கூல்டு, 649சிசி, இன்லைன் 4-சிலிண்டர் DOHC இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 86bhp, 60Nm செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு ஷார்ட் ரேஷியோ கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஸ்போர்ட்-டூரிங் செய்ய தலைசிறந்த இன்ஜினாக இந்த மோட்டார் இருக்கிறது.

புதிய 41 மில்லிமீட்டர் ஷோவா டூயல் பென்டிங் வால்வ் முன்பக்க ஃபோர்க் மற்றும் புதிய சஸ்பென்ஷன்சிஸ்டம் உள்ளிட்டவை வாகனத்தை சிறப்பாக கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் யுனிட் மற்றும் 7-ஸ்டேஜ் ஸ்ப்ரிங் பிரீலோடு அட்ஜஸ்ட்மென்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை 320 மில்லிமீட்டர் டூயல் ஹைட்ராலிக் முன்பக்கமும், பின்புறம் 240 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.