Apr 22

ஐ.பி.எல்.திருவிழா; பட்லர், ரானா அபாரத்தால் மும்மை வெற்றி

ஐ.பி.எல் தொடரில் இந்தூரில்  நடைபெற்ற  22ஆவது போட்டியில் 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 104 ரன்கள் விளாசிய ஆம்லாவின் சதம் வீணாக மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக அதிகபட்ச இலக்கை  வெற்றிகரமாக அடைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ஓட்டங்களை குவித்தது. ஹசீம் ஆம்லா 60 பந்துகளை எதிர்கொண்டு 104ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த ஐ.பி.எல் தொடரில் பெறப்பட்ட முதல் சதம் என்பது முக்கியமானது. இவருக்கு துணையாக மக்வெல் 40ஓட்டங்களை குவித்தார்.

பதிலுக்கு இமாலய இலக்கை விரட்டிய மும்மை அணிக்கு பார்த்திவ் படேல்(37) ஜோஸ் பட்லர் 37 பந்துகளில் 77 ஓட்டங்களையும்,  ரானா  7 சிக்சர்களுடன் 34 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க 15.3 பந்துகளில் அவ்வணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.