Apr 22

தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130க்கும் அதிகமானோர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் தாலிபன் தொடுத்த தாக்குதல் நடவடிக்கையை அந்நாட்டு ராணுவம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இத்தாக்குதலில் 130க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் பெரும்பாலனவர்கள் அரசுப்படையினர்.

வட புற பால்க் மாகாணத்தில் பலமணி நேரங்களுக்கு சண்டை நீடித்ததாக கூறப்படுகிறது. ராணுவ தளத்திலிருந்த மசூதியிலிருந்து வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து வெளியேறியவர்களையும், அங்கு ஓர் உணவகத்திலிருந்த மற்றவர்களையும் கிளர்ச்சியாளர்கள் குறிவைத்ததாக ராணுவ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

செய்திக்குறிப்பு ஒன்றில் தாலிபன் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.மேலும், தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்தி பாதுகாப்பு நிலைகளை தகர்த்ததாக கூறியுள்ளது. மஸார்-இ-ஷரிஃப் என்ற நகரிலிருந்த ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த மோதலில் குறைந்தது 10 தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு தாக்குதல்தாரி தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.