Apr 22

லிபரல் அரசின் குடியுரிமைச் சட்டமூலத்தில் கனேடிய செனட் சபை திருத்தம்

கனேடியக் குடியுரிமைச் சட்டத்தில்  செனட் சபையினால் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை குடியுரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். இத்திருத்தத்தின் மூலம் குடியுரிமை பறிக்கப்பட முன்னதாக  நிதீமன்று ஒன்றின் முன்னர் தமது பிரச்சினையை முன்வைக்க கனேடியர்கள் ஒரு சந்தர்ப்பத்தைப் பெறுவார்கள்.  

2015 ஆம் ஆண்டிற்கு முன்னர், ஒருவரது குடியுரிமை பறிக்கப்பட முன்னர், மத்திய அரசின் குடிவரவு அதிகாரிகள் மத்திய அரசின் நீதிமன்றம் ஒன்றின் முன்னர் தோன்றி, குறிப்பிட்ட அந்த நபர் பிழையான தகவல்களை வழங்கியதன் மூலம் கனேடியக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டார் என்ற விடயத்தை தெரிவிக்கவேண்டும்.  அதன் பின்னதாகவே குடியுரிமை பறிக்கப்படுவதற்காக அவரது பெயர் ஆளுனருக்குச் சமர்ப்பிக்கப்படலாம்.

ஆயினும், முன்னைய பழமைவாதக் கட்சி அரசு , இந்நடைமுறைகளை மாற்றியதன் மூலம், மோசடியினால் குடியுரிமை பெறப்பட்டுள்ளதா என்பதையும், குடியுரிமை பறிக்கப்பட வேண்டுமா என்பதையும் குடிவரவு உத்தியோகத்தர் ஒருவரே தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கியிருந்த்து.