Oct 09

இப்படியும் ஒரு காதலா... திருமணம் முடிந்த 72 மணிநேரத்தில் உயிர் துறந்த புதுப்பெண்...!

இங்கிலாந்தில் திருமணம் முடிந்த 3 நாளில் ஆசிரியை ஒருவர் குடல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. (29) என்பவர் இங்கிலாந்தில் உள்ள Maltese Road Primary School- இல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு அதிகமாக அஜீரண பிரச்சனை இருந்துள்ளது, இதனால் மருத்துவரிடம் சென்று சோதனை செய்த போது குடல்புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார், Katie- க்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தும் Will Arnold என்பவர் இவரை காதலித்து வந்துள்ளார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த Katie, அதன்பின்னர் Arnold- ன் காதலை ஏற்றுக்கொண்டார்.இதற்கிடையில் Katie- க்கு இருக்கும் புற்றுநோயின் தாக்கம் தீவிரமடைந்ததால், உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம் என Will Arnold முடிவு செய்துள்ளார்.

அதன்படி, இவர்கள் இருவரது திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது, திருமணத்தன்று அனைவருடனும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியாக இருந்துள்ளார் Katie.

திருமணம் முடிந்து மூன்று நாட்களில் மயங்கி விழுந்த Katie- ஐ மருத்துவமனையில் அனுமதித்த போது, குடல் புற்றுநோயானது தீவிரமடைந்து கல்லீரல் வரை பரவி விட்டது, அவர் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள்தெரிவித்து விட்டனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த Arnold மருத்துவமனையில் வைத்து கண்ணீர் சிந்தியுள்ளார், மருத்துவமனையில் அனுமதித்த சில மணிநேரத்திற்குள் Katie- யின் உயிர்பிரிந்தது.