Apr 21

காக்கை வன்னியன் போல செயற்படும் சிலரால் அழிவு: வடக்கு முதல்வர் எச்சரிக்கை

காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் சிலர் ஈடுபடுவது முழு தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என்பதை மறந்துவிடக்கூடாது என வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் சிலையை முல்லைத்தீவில் இன்று திறந்து வைத்த போதே அவர் இதனைக் கூறினார்.