Apr 21

குடிவரவு அமைச்சர் இளையோருடன் சந்திப்பு

கனடாவின் குடிவரவு அமைச்சர்  அஹமட் ஹூசேன் அவர்கள் அண்மையில் வான்கூவர் நகரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அகதிகள் மற்றும் குடிவரவாளர்களின் பதின்ம வயதினரைக்கொண்ட குழுவினருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

Fresh voices என்று அழைக்கப்படும் இக்குழுவினருடன் அமைச்சர் மேற்கொண்ட சந்திப்பின் போது, அவர்கள் தமது குடியமர்வு அனுபவங்களை அமைச்சருடன் பகிர்ந்து கொண்டனர்.

 தனது 16 வயதில், எவருடைய துணையும் இன்றி தனியாக கனடாவிற்கு அகதியாக  வந்த அமைச்சர் அஹமட் ஹூசேனிடம், இந்த இளையோர் குழுவினர் தமது பரிந்துரைகள், கேள்விகள் மற்றும் யோசனைகளைப் பகிர்ந்துகொண்டனர்.