Apr 21

எம்.பி.க்களின் செல்வாக்கை பிரதிபலிக்கப் போகும் பழமைவாதக் கட்சித் தலைமைக்கான தேர்தல்

பழமைவாதக் கட்சித் தலைமைக்கான தேர்தல், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது தொகுதிகளில் கொண்டிருக்கும் செல்வாக்கைப் பிரதிபலிக்கப் போவதாக அமையப் போகின்றது.

பழமைவாதக் கட்சித் தலைமைக்காகப் போட்டியிடும் 14 வேட்பாளர்களில் தாம் ஆதரிக்கும் வேட்பாளர் தமது தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற வேண்டுமென்று, அவ்வத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக செயற்பட்டு வருகின்றனர். தொகுதிவாரியாக நடைபெறும் தலைமைப் பதவிக்கான தேர்தல், அத்தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்கும் செல்வாக்கைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.   

தாம் ஆதரவளிக்கும் வேட்பாளர்கள் தலைமைப் பதவிக்குத் தெரிவு செய்யப்படுமிடத்து, நிழல் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சந்தர்ப்பம்        அப்பாராளுமன்ற உறுபினர்களுக்குக் கிடைக்கவும் கூடும்.