Mar 04

சடலத்துடன் தனிமையில் இருந்த சிறுவன்

சிறுவன் ஒருவன் அதுவும் 3 வயது சிறுவன் உயிரிழந்த தன் தாயுடன் தனியாக இரண்டு நாட்கள் வசித்துள்ள சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இச்சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதுஇ லிடியா மெக்டொனால்ட். இவருக்கு மேசன் மார்ட்டின் (வயது 3) என்ற மகன் உள்ளான்.

லிடியாவின் கணவர் மேசன் 8 மாத குழந்தையாக இருக்கும் போதே உயிரிழந்து விட்டார். இதனால் லிடியா தன் மகனுடன் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதேவேளை லிடியாவிற்கு வெகு நாட்களாகவே கடுமையான ஆஸ்துமா நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையில் லிடியாவிவிற்கு ஒரு நாள் கடுமையான ஆஸ்துமா பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் முச்சு விட முடியாமல் திணறி தன் வீட்டு படுக்கையிலேயே இறந்துள்ளார்.

 இதனையடுத்து குழந்தையான மேசனுக்கு  என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு நாட்கள் தன் தாயின் சடலத்துடன் அவர் அருகிலேயே இருந்துள்ளான்.

இரண்டு நாட்களின் பின்னர் லிடியாவின் தாய் மெக்டொனால்ட்  அவர் வீட்டுக்கு வந்து நிலைமையை பார்த்து தன் மகளின் சடலத்தை மீட்டு தன் பேரனையும் காப்பாற்றியுள்ளார்.

 இச்சிறுவன் இரண்ட நாட்களும் வீட்டு பிரிட்ஜில் இருந்த சில உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளான் என தெரியவந்துள்ளது.