Apr 21

ஒன்ராரியோவின் தொழிலாளர்களையும், வியாபாரங்களையும் பாதுகாப்பது உறுதி: முதல்வர் கத்லீன் வின்

அமெரிக்காவின் நியூ யோர்க் மாகாணம், “அமெரிக்கப் பொருட்களை மட்டுமே வாங்குதல் (Buy American) ” என்ற தனது கொள்கையைக் கைவிட்டமை தொடர்பாக ஒன்ராரியோ முதல்வர் கத்லீன் வின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஒன்ராரியோவின் பொருளாதாரம் , நியூ யோர்க் மாகாணத்தின் பொருளாதாரத்துடன் ஆழமாகத் தொடர்புபட்டுள்ளது. மேலும் இத்தொடர்பு இரண்டு மாகாணங்களின் வளர்ச்சிக்கும், நல்ல தொழில் வாய்ப்புக்களுக்கும் ஆதரவாய் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கனடாவின் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் வியாபாரங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யும் பொருட்டு, ஒன்ராரியோவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மைக்கேல் சான் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பிராட் டுகுயிட் (Brad Duguid) ஆகியோர் நீயூ யோர்க் இல் அமைந்துள்ள அல்பனி நகரிற்கு அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.