Apr 21

வெனிசுலாவில் ஆர்ப்பாட்ட மோதல்களில் மூவர் உயிரிழப்பு

வெனிசுலாவில்  அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் மதுரோவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின்  போது இடம்பெற்ற மோதல்களில் சிக்கி குறைந்தது மூவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி மோதல்களில் சிக்கி தலைநகர் கரகஸ்ஸில் 17  வயது   இளவயதினர் ஒருவரும்  கொலம்பிய எல்லைக்கு அண்மையிலுள்ள சான் கிறிஸ்டோபல் நகரில் 232  வயது யுவதியொருவரும்  உயிரிழந்துள்ளனர். அதேசமயம் தலைநகரின் தெற்கே இடம்பெற்ற மோதல்களில் தேசிய காவல் படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 புதிய தேர்தலை நடத்தவும்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை விடுதலை செய்யவும் வலியுறுத்தி நாடெங்கும் இடம்பெற்ற  மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்  பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதன்போது  சுமார் 30  ஆர்ப்பாட்டக்காரர்கள் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அந்நிலையில் மேலும் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க  எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றிக் கப்றிலெஸ் அழைப்புவிடுத்துள்ளார்.