Apr 21

வட கொரியா பயணிக்கும் பாதையில் ஈரான் செல்லும் அபாயம்

மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையை குலைப்பதையும்  அந்தப் பிராந்தியம் தொடர்பான அமெரிக்க அக்கறைகளைக் குழிதோண்டிப் புதைப்பதையும் நோக்காகக் கொண்டு  ஈரானானது  சினமூட்டும்  நடவடிக்கைளில்  ஈடுபட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் தில்லர்ஸன்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

பரிசோதனைக்குட்படுத்தப்படாத ஈரானானது  உலகையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட வட கொரியா பயணிக்கும் அதே பாதையில் செல்லும் நிலை  காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தி உடன்படிக்கை தொடர்பில் மீள் மதிப்பீடொன்றை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையிலேயே ரெக்ஸ் தில்லர்ஸனின் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது.

ஈரான் உலகில் தீவிரவாதத்துக்கு ஏற்பாததரவு வழங்கி வரும் முன்னணி நாடாகவுள்ளதுடன் சிரியா, யேமன், ஈராக் மற்றும் லெபனான்  போன்ற நாடுகள் தொடர்பான  அமெரிக்க அக்கறைகளை குழிதோண்டிப்  புதைத்து வருகிறது.

அதுமட்டுமல்லாது அந்நாடு இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என அவர் தெரிவித்தார்.