Apr 21

பனாமா ஆவணக் கசிவு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தானிய பிரதமர் நாவாஸ் ஷெரீப்பை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை என  அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

2015  ஆம் ஆண்டு பனாமா ஆவணக் கசிவில் வெளியான வெளிநாட்டு கணக்குகளில் நவாஸ் ஷெரீப்பின் 3  பிள்ளைகளுக்கு தொடர்புள்ளதாக  தகவல் வெளியானதையடுத்து அவரது குடும்ப வர்த்தக  செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுந்தது.

இது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பானது நவாஸ் ஷெரீப் தொடர்ந்து பதவியில் இருப்பாரா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கும் முக்கிய ஒன்றாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டு குறித்து  நவாஸ் ஷெரீப்பை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு போதுமான  சான்றுகள் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளது.