Apr 21

ஐ.பி.எல்.திருவிழா: சன்ரைசஸ் ஹைதராபத் 15ஓட்டங்களால் வெற்றி

ஐ.பி.எல் தொடரில் 21ஆவது போட்டியாக சன்ரைசஸ் ஹைதராபத் மற்றும் டெல்லி டெயாடேர்வில் அணிக்கும் இடையிலான போட்டி ஹைதாரபாத்தில் நடைபெற்றது. 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஹைதராபத் முதலில் துடுப்பெடுத்தாடியது. சிஹார் தவான் (70), வில்லியம்ஸ்ன்சன் (89) அதிரடியாக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க 20ஓவர்கள் நிறைவில் அவ்வணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து 191ஓட்டங்களை குவித்தது.

டெல்லி டெயாடேர்வில் அணியின் கிறிஸ் மொறிஸ் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இலக்கை விரட்டிய டெல்லி டெயாடேர்வில் அணிக்கு சம்சந்(42), நைர்(33) ஐயர் ஆட்டமிழக்காது(50) என ஓட;டங்களைப் பெற்றக் கொடுத்த போதும் அவ்வணியால் இருபது ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களையே பெற முடிந்தது. 

இதனால் சன்ரைசஸ் ஹைதராபத் அணி 15ஓட்டங்களால் வெற்றி பெற்றதோடு வில்லியம்ஸ்சன் ஆட்ட நாயகனாக தெரிவானார்.