Mar 04

தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு நம்பிக்கை

உயிருள்ள நபர் ஒருவர்  தன் விருப்பத்தின் பேரில் சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டுள்ள ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இச்சசம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதுஇ ஜோன் எட்வேர்ட் என்பவர் தன் மனைவியான த்ரிஷ் உடன் வசித்து வருகிறார். 

 இதேவேளை இவர்  உலகிற்கு அதுவும் போதைவஸ்து பியோகிப்பவர்களுக்கு  ஒரு நல்ல ஆலோசனையை கூற ஒரு வித்தியாச முறையை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இருப்பவர்கள் அதை கைவிட வேண்டும் என கூறி உயிருடன் தன்னை தானே சவப்பெட்டியில் வைத்து பூமிக்கடியில் 3 நாட்களுக்கு ஜோன் புதைக்கப்பட்டுள்ளார்.

 புதைகுழி உள்ளே அவருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் இண்டர்நெட் வசதியும் அங்கு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜோன் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

 ‍ஜோன் தெரிவித்திருப்பதாவதுஇ நானும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்தம் அடைந்து தற்கொலை எண்ணம் கொண்டேன். பின்னர் அதிலிருந்து மீண்டேன்.தற்போது இது குறித்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவே இந்த காரியத்தில் ஈடுப்பட்டேன் என அவர்  தெரிவித்துள்ளார்.