Oct 06

மலேசியப் பெண் தொழிலதிபர் 'விடா'வின் ஆடல்- பாடல், யூ-டியூப் கலக்கல்! -(VIDEO)

பிடிக்கிறதோ, இல்லையோ, பிரபல ஒப்பனைத் துறை தொழிலதிபர் ஜாம்பவான் டத்தோஶ்ரீ விடாவின் புதிய பாடல் வீடியோ யூ-டியூப்பில் (YouTube) 85 லட்சம் மக்களின் பேர் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட "ஐ அம் மீ" (I am Me) என்ற அந்தப் பாடலை 67,000 பேர் 'லைக்' செய்துள்ள வேளையில், 37,000 பேர் அதனை விரும்பவில்லை என "லைக் பட்டன்" வாயிலாக தெரிவித்துள்ளனர்.  

அந்தப் பாடல் வீடியோவை, கே.ஆர்.யூ (KRU) நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், டத்தோஶ்ரீ விடா, தமக்கென்று வடிவமைத்துக் கொண்ட கிரீடம் அணிந்திருந்தார். இளம் சிவப்பு நிறத்தில் உடை அணிந்து, அவர் ஆடிய நடனம் பலரை வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தது. 

பலர் அந்த வீடியோவை குறைக் கூறிய போதிலும், சிலர் டத்தோஶ்ரீ விடாவின் தன்னம்பிக்கையை பாராட்டி உள்ளனர்.