Mar 04

தெ.ஆபிரிக்கா வெற்றி; தொடர்ந்தும் முதலிடத்தில்

நியூஸிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று ஒக்லன்ட்டில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடியது. 

41.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூஸிலாந்த 149 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. கிரான்ட் கூம்மி மட்டுமே அதிகபட்சமான 32ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

தென் ஆபிரிக்க பந்து வீச்சில் ரபடா 3விக்கெட்டுக்களையும் இம்ரான் தஹீர், பிஹில்வாயோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 32.2ஓவர்களில் 4விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 150ஓட்டங்களைப் பெற்று ஆறு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. 


டு பிளஸிஸ் ஆட்டமிழக்காது 50ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் தென் ஆபிரிக்கா 3-2 என தொடரை வெற்றி கொண்டதோடு ஒருநாள் தரவரிசையில் முதல் தர அணி என்பதையும் தக்க வைத்துள்ளது.