Apr 19

ஐ.பி.எல். திருவிழா: கெய்ல் அபாரத்தால் வென்றது பெங்களுர்

ஐ.பி.எல். தொடரின் 20 போட்டியில் குஜராத் லயன்ஸ் பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதியிருந்தன. 

ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

கிறிஸ் கெய்ல்(77), விராட்கோலி(64), ஹெட் (30), யாதவ்(38) ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். இதனால் 20ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை அவ்வணி பெற்றது. 

214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய குஜராத் அணியின் ஆரம்ப வீரர் ஸ்மித் (01); வெளியேறினார். மறுபுறத்தில் பிரண்டன் மக்கல்லம் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். 

அவருடன் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் ரெய்னா 8 பந்துகளில் 2 புண்டரி, 2 சிக்சர் என 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, பின்ச் (19), டி கார்த்திக் (01), ஜடேஜா (23) ஓட்டங்களை எடுத்து வெளியேற குஜராத் அணி தடுமாறியது. 

எனினும் அந்த அணியின் கிஷான் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ஓட்டங்களைப் பெற்று இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய போதும் அவ்வணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களையே பெற முடிந்தது. 

இதனால்  ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.  போட்டியின் ஆட்டநாயகனாக கிறிஸ் கெய்ல் தெரிவானார்.