Apr 19

ஐ.பி.எல்.திருவிழா: பஞ்சாப்பை வென்றது ஹைதாரபாத்

ஐ.பி.எல் தொடரின் 19ஆவது போட்டியில் சன்ரைஸ்சஸ் ஹைதாரபாத் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதாரபாத் 20ஓவர்கள் நிறைவில் 6விக்கெட்டுக்களை இழந்து 159ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் டேவிட் வோர்ணர் ஆட்டமிழக்காது 70ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு வோரா அதிராக 95ஓட்டங்களைப் பெற்ற துணையளித்த போதும் ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து அரங்கு திரும்பியமையால் 5ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

அவ்வணி 19.4 ஓவர்களில் 154ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

அபாராமாக பந்து வீசிய ஹைதாரபாத் அணியின் புவவேனஸ்குமார் ஐந்து விக்கெட்டுக்களை பெற்றதோடு ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.