Oct 04

தலைவனின் தலைப்பிள்ளை… சார்ல்ஸ் அன்ரனி…!

உலகமே வியந்து நோக்கும் ஒரு மாமனிதனை தந்தையாக கொண்ட ஒருவர்,உலக தமிழ் மக்கள் கொண்டாடுகின்ற தலைவனின்மகனென்றுஆணவமோ,இறுமாப்போ,அகந்தையோ ஏதுமற்ற சாக்லட் குழந்தை சார்லஸ் அன்ரனி.

தலைவனின் பிள்ளையென்று எப்போதும் தன்னை காட்டிக் கொள்ளாத பிள்ளை,படித்தது யாழ்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் படிப்பில் படுகெட்டிகாரன் பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும்.தலைவரின் மகன் என்று ஏதும் பாதுகாப்பு ஒழுங்குகளோ அல்லது ஏதும் சிறப்பு வசதிகளோ சால்ஸ்க்கு ஒன்றுமே இருந்தது இல்லை.வருவதும் போவதும் தெறியாமலே ஒரு சாதாரண மாணவனாகதான் படிப்பை முடித்தார்.அவர் விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டதும் வன்னி காடுகளில் தானேயன்றி வெளிநாடுகளில் அல்ல.

உண்மையில் சார்லஸ் சண்டைகளுத்துக்குரிய பிள்ளையே அல்ல அதுவொரு சாக்லெட் குழந்தை என்றுதான் தளபதிமார் கூறுவினம்.தலைவரின் முதல் பிள்ளை என்பதால் தளபதிமார் அத்தனைப் பேருக்கும் செல்லம்.தலைவர் முகாமில் இருக்கின்றரை சால்ஸை பயிற்சியில் ஈடுபடுத்திவிட்டு தலைவர் வாகனத்தில் ஏறி வாகனம் வளவு திரும்புவதற்குள் “நீ போய் படுத்துக்கோ தம்பி”என்று அனுப்பி வைக்கும் அளவுக்கு சால்ஸ் தளபதிமாரின்ர செல்லம்.

எவரையும் காயப்படுத்தாத தலைவரின் மகனென்று எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத பிள்ளை.மற்ற போராளிகளை போலதான் சால்ஸ்சும்.எல்லோரிடத்தும் அப்பா,மாமா,அண்ணே என்றே குழைந்து திரியும் குழந்தை சார்லஸ் அன்ரனி.இறுதி சண்டையில் ஆமி இறுக்கம் நெருங்கிகொண்டே வர தலைவனின் தலைமகன் என்பதால் தன்னை காப்பாற்றுங்கோ என்றோ,தற்போதுள்ள அரசியல் வியாதிகளைப்போல் தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வையுங்கள் என்றோ ஏதும் கேட்கவில்லை,அவன் அண்ணை பிரபாகரன் ரத்தம் எப்படி கேட்பான் அப்படி ? “செய் அல்லது செத்துமடி”என்ற தன் தகப்பனின் வேத மந்திரத்தையே தானும் உளப்பூர்வமாக ஏற்று களமாடி பிரபாகரன் மகன் என நிருபித்து வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

உண்மையில் கிளிநொச்சி ஆமியிடம் வீழ்ந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடி பிரிவொன்றின் அங்கமாய் புல்மோட்டை காட்டுபகுதிக்குள் நகர்ந்து நிண்டார்.முல்லைதீவு முற்றுகை இருகிக்கொண்டே வர விடுதலைப் போராட்டம் பாதுகாக்கபட வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்ற முடிவை தளபதிமார் எடுத்தபோது அதை ஏற்க மறுத்து “என்னை நம்பி வந்த மக்களையும் நான் வளர்த்த போராளிகளையும் விட்டிட்டு நகரமாட்டேன் என்று பிடிவாதமாக நிண்டார்.

இத்தனையாண்டு காலப் போராட்டத்தையும் இத்தனையாண்டு காலப் போராளிகளின் தியாகத்தையும் அவர்கள் கண்ட கானவையும் மெய்பிக்க வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகன்றே தீரவேண்டுமென்று மேலும் அழுத்தமாக தளபதிமார் சொல்ல. “சார்லஸ் காட்டுக்குள் நிக்கிறான் தன்னையும் மகனையும் காப்பாற்றிக்கொண்டு போராளிகளையும் மக்களையும் அழிவுக்கு கொடுத்தான் பிரபாகரன் என்ற வரலாற்றுபழி என்னை சேரவிடமாட்டேன்”என்று மேலும் தலைவர் பிடிவாதமாக கூற,

தளபதிமார் வேறுவழியின்றி அப்படியானால் சால்ஸை களத்திற்கு அழைத்துகொண்டு வருகின்றோம் என்று தளபதிமார் சொன்ன பிறகுதான் தலைவரின் பிடிவாதம் சற்று தளர்ந்தது அந்த ஒரு நொடி தளபதிமாருக்கு போதுமானதாக இருந்தது.எளிமையாக கூற வேண்டுமென்றால் விடுதலைப் போராட்டத்தையும் தலைவரையும் பாதுகாக்க வேண்டி தளபதிமார் தந்தையிடமே மகனின் உயிரை விலை பேசினர் என்பதே உண்மை.

தமிழுலகே என் தமிழ்சாதியே இப்படியொரு அப்பழுக்கில்லாத உன்னதம் உலகினில் வேறெங்காவது நிகழ்ந்ததுண்டா?

இப்படியொரு நீதியான தலைவனை உலகில் வேறெங்காவது பார்த்ததுண்டா? படித்ததுண்டா? கேட்டதுண்டா? அப்படி கேள்விப் பட்டதுண்டா?

ஒரு பசுவின் கன்றுக்காக தான்பெற்ற மகனையே தேர்காலிட்டு கொன்றானாம் மனுநீதி சோழன் என்று ஏட்டில் படித்திருக்கின்றேன்,மனுநீதி சோழன்கூட தனது ஒரு மகனைதான் கொன்று நீதியை நிலை நாட்டினார் ஆனால் அந்த மனுநீதி சோழனையும் விஞ்சியவர் எங்கள் ஈழமகாராஜன்.பிரபாகரன் வம்சம் என்று ஓங்கி உரக்கசொல் மார்தட்டி பெருமைகொள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

-பிரபாசெழியன்.