Oct 04

திலீபன் அண்ணாவின் தியாகம் மறையும் முன் பலி தீர்த்த பாரத தேசம்…

கடலிலே கடல் புறா

பயணங்கள் போனது

மீண்டும் ஒரு முறை

தமிழர் தலைகளில்

இடி விழுந்தது


தியாகத்தின் நினைவுகள்

எம் மனங்களில் மறையும் முன்

பன்னிரு வேங்கைகளை

பலி தீர்த்து கொன்றது

பாரத தேசம்


கொள்கை வழியினில் நின்று

உறுதி தளராது நஞ்சினை அருந்தி

விடுதலை உணர்வோடு

விழி மூடி போயினர்

கரிகாலன் வளர்த்த வீர தளபதிகள்


தீருவில் வெளியில்

தீயுடன் சங்கமம் ஆகினர்

தீராத வேதனை தந்து

போரிடும் வல்லமை தந்துமே

விடை பெற்றார்கள்