Oct 04

சந்திரன் மோதி பூமி அழியும் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

அறிவியல் கண்களில் பார்த்தால் விண்கல், நட்சத்திரம், பூமி உட்பட அண்டத்தில் மிதக்கும் அனைத்துமே ஒரு விண்வெளி பொருள் தான்.

அருகாமை விண்பொருட்களான பூமி, சந்திரன் நிகழ்த்தும் பேரழிவு மோதல் நிச்சயமாக நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக அடித்து சொல்கின்றனர்.

சந்திரன் ஒவ்வொரு வருடமும் 4 செ.மீ., அளவில் பூமியை விட்டு நகர்ந்து செல்கிறது. ஆனால் இந்த நகர்தலின் முடிவில் பூமியை நோக்கி ஒரு கடுமையான பாய்ச்சலை சந்திர கிரகம் நிகழ்த்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியின் கடல்களில் அலைகள் ஏற்பட காரணமான சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக, சந்திரன் பூமியை நோக்கி வரும், முடிவில் பூமியோடு மோதல் நிகழும் என விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.

சந்திர கிரகம், பூமியின் சுழற்சியை உள்வாங்கி, சுற்றுப்பாதை இயக்க ஆற்றலைத் துண்டித்துவிடும். பின், பூமியுடன் மோதல் ஒன்றை நிகழ்த்தும்.’ என விஞ்ஞானிகள் விளக்கமளிக்கின்றனர்.

இந்த பூமி, சந்திரன் மோதல் நிகழ 65 பில்லியன் ஆண்டுகள் ஆகும். அதற்குள் சூரிய மண்டலத்தின் ஒட்டுமொத்த கதையே மாறிவிடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அப்போது சூரியன், வாழ்நாள் முடிவடையும் தருணத்தை எட்டியிருக்கும்.

இறுதியில் சூரிய மண்டலத்தின் பெரும்பகுதியை அது விழுங்கி முடிக்கும்.ஆரம்ப கால பூமி கிரகம், செவ்வாய் கிரக அளவு கொண்ட ஒரு கிரகத்துடன் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாய் உருவானதே சந்திரன் என நம்பப்படுகிறது.