Mar 04

இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா தடுமாற்றம்

அவுஸ்திரேலியா மற்றும் இந்திய  அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களுரில் இன்று ஆரம்பமானது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா துடுப்பாட்டத்தை  தெரிவு செய்தது.அவுஸ்திரேலிய அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் நெதன் லயனின் ஆபரமான பந்துவீச்சில்; 189 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ஆரம்பந்த துடுப்பாட்ட வீரர் லோகேஸ் ராகுல்(90), அபிநைவ் முகுந்(00), புஜாரா(17), விராட் கோஹி (12), ரஹானே(17), கருன் நாயர் (26), அஸ்வின்(07), சாஹா(01), ஜடேஜா(03), இஷாந் சர்மா(00), யாதவ்(00) என வரிசையாக ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சை ஆரம்பித்தது.  முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தபோது அவுஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. டேவிட் வோர்னர் (23) ரென்ஸோ (15) ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

பூனேயில் நடைபெற்ற முதற்போட்டியில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறி அவ்வணி இப்போட்டியிலும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது.