Apr 19

இந்தியா புறப்பட்டதை சமூக வலைத் தளங்களில் பதிவிட்ட கனேடிய அமைச்சர் ஹர்ஜித் சஜான்

கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். ஏப்ரல் 17 தொடக்கம் 24 வரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார்.  தான் இந்தியாவிற்குப் புறப்பட்டதை அவர் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

தனது பயணம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறியவிரும்புவோர் தனது முகநூல் அல்லது ட்விட்டர் (Twitter) பக்கங்களைப் பின்தொடருமாறும் அவர் கேட்டுள்ளார். தனது இந்தியப் பயணத்தின்போது நடைபெறும் விடயங்களை தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் தான் பதிவேற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..

அவரது இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளில் கவனம் செலுத்துவதாகவும் கனடா-இந்திய உறவை மேலும் பலப்படுத்துவதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.