Oct 03

டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் ரெட்மி நோட் 5.!

தற்சமயம் சியோமி ரெட்மி நோட் 5ஏ அறிமுகம் செய்யப்பட்டது, அதை தொடர்ந்து விரைவில் ரெட்மி நோட் 5 என்ற மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் நினைவக மாறுபாடு தோராயமாக ரூ.11,800/- என்ற விலைக்கும், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மாறுபாடு சுமார் ரூ.13,800/- என்ற விலைக்கும் சந்தையை அடையலாம்.

இந்த ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் டூயல் ரியர் கேமரா வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.