Sep 30

யாழ். எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் வாணி விழா - 2017

29.09.2017 அன்று காலை 10.00 மணியளவில் இந்துமாமன்ற பொறுப்பாசிரியர் திரு. சி. ரவிச்சந்திரன் தலைமையில் யாழ். எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் வாணி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம்; கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் பழைய மாணவிகளான திருமதி ஞா. சசிகலா, திருமதி உ. இராஜேஸ்வரி (கனடா) ஆகியோரும், கௌரவ விருந்தினராக எழுவைதீவு முத்தன்காடு முருகமூர்த்தி தேவஸ்தான குருக்கள் பிரம்மஸ்ரீ முரளிதர வித்தியானந்தக் குருக்கள் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


அன்றைய நாளிலே பாடசாலையின் முன்றலில் தமது பெற்றோர்களான குமாரசாமி பத்மாவதி அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலையினை திரு. திருமதி  ஞானசோதி சசிகலா தம்பதியினர் திறந்து வைத்தனர். மேலும் வட மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் யாழ். எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்திற்கு ரூபா ஒரு இலட்சத்துக்கு (100,000.00) கனணியும் வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றுவதைனையும், நிகழ்வினை நெறிப்படுத்திய யாழ். எழுவைதீவு முருகவேள் வித்தியாலய அதிபர் திரு. கமலதீபன் வட மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம்;  அவர்களிடம் இருந்து ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான கனணியைப் பெற்றுக் கொள்வதனையும், பொன்னாடை போத்தி மதிப்பளிப்பதனையும், வாணிவிழா அலங்கரிப்புப் போட்டியில் 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைப்பதனையும், ஏனைய நிகழ்வுகளையும்  படங்களில் காணலாம்.