Sep 30

உலகின் மிகவும் காரமான மிளகாய்

இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் காரமான மிளகாயை உருவாக்கியுள்ளார்கள். இந்த மிளகாய்க்கு papper X என பெயரிடப்பட்டுள்ளது.

நாட்டிங்க்ஹாம் பல்கலைகழகத்தில் தனது குழுவினருடன் ஆராச்சியில் ஈடுபட்ட போது இந்த மிளகாயை உருவாக்கியுள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார்.மேலும், அவர் கூறியதாவது இந்த மிளகாயை உருவாக்க வேண்டும் என்பது குறித்த எவ்வித திட்டமிடலும் இல்லை என்றும் ஒரு விபத்தை போலவே இந்த மிளகாயை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாகவே கரோலினா ரீப்பர் என்ற மிளகாய், மிகவும் காரமானது என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் பெப்பர் X என பெயரிடப்பட்டுள்ள இந்த மிளகாய் காரத்திற்கான அளவுகோளில் கரோலினா பெப்பரை விட 1.6 கோடி மடங்கு காரணமானது என இதன்  உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

100 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் அதிக பட்சம் சுமார் 4.72 கிராம் அளவுள்ள காரத்தை தாங்கும் திறன் பெற்றிருப்பார்.ஆனால், இந்த மிளகாய் சுமார் 3.18 மில்லியன் அளவிற்கு காரசுவையை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.

இந்த மிளகாயை நேரடியாக சுவைத்தால் அதிர்ச்சியில் உடனே இறந்து விடும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இத்தகைய மிளக்காயிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த sauce நீர்த்துப்போன வினாகிரி, இஞ்சிவேர், சந்தனவகைகள்,சீரக, கொத்தமல்லி, கடுகு போன்றவற்றைச் சேர்த்து தயாரான Sauce மிக வேகமாக அமெரிக்காவில் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.