Sep 30

“ஐ லவ் யூ” சொல்லியாச்சா? அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும்

காதல் பரிசுகள் என்றால் காதல் கவிதைகள் எழுதப்பட்ட அட்டைகள் தொடங்கி பூங்கொத்துகள், மோதிரம் என வகை வகையாக அடுக்கி கொண்டே செல்லலாம். 

ஐ லவ் யூ என்ற மூன்றெழுத்த வார்த்தையை பரிமாறிக்கொண்டவுடன், அடுத்தகட்ட வேலையாக பரிசுகளை பரிமாற ஆரம்பித்துவிடுங்கள். 

 அப்போது, உங்கள் காதல் இன்னும் சூடு பிடிக்கும். ஆனால் காதல் பரிசாக இதுதான் கொடுக்கவேண்டும் என்ற எவ்வித நிர்பந்தமும் இல்லை. 

 ஆனால். நீங்கள் அளிக்கும் பரிசுகள் உங்கள் துணையின் மனதில் நச்சென்று நங்கூரம் போன்று ஒட்டிக்கொள்ள வேண்டும், ஏனெனில் பிரிவின் போது கூட உங்கள் பரிசுகளை பார்த்தால் அவர்களுக்கு உங்கள் ஞாபகம் வரவேண்டும். 

 என்ன பரிசுகள் கொடுக்கலாம்? 

 வாசனை திரவியங்கள் 

 இது சாதாரண பரிசு என்றாலும் கூட, உடலை மணக்கச்செய்வது போன்று காதலையும் மணக்கச்செய்யும் எவ்வித சந்தேகமுமில்லை, இந்த வாசனை திரவியங்கள், நம்முடைய காதலர் நமது அழகில் அக்கறை கொண்டுள்ளார் என்பதையே காட்டும்.