Apr 17

தமிழக அரசும், தமிழர்களும் ஒற்றுமையாக இருந்தால் இந்தி தமிழகத்திற்குள் கால் பதிக்காது

தமிழக அரசும், தமிழர்களும் ஒற்றுமையாக இருந்தால் இந்தி மொழி தமிழகத்திற்குள் கால் பதிக்காது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஹார்பின் சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் திருக்குறள் செம்மல் மணிமொழியத்தின் திருக்குறள் கருத்துகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.


நூலை குன்றக்குடி ஆதினார் பொன்மலை அடிகள் வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய வைரமுத்து குடியால் தற்கொலை செய்தவர்களின் பட்டியில் தமிழகம் 2-வது இடத்தில் இருப்பதாக வருத்தும் தெரிவித்தார். இந்தி மொழி எதிர்ப்புக்கு தமிழக அரசு வலிமையானதாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வாழ்வதற்கே வழியில்லாத போதுதான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக வைரமுத்து குறிப்பிட்டார். மனம் என்பது வளர்ச்சி, வீழ்ச்சி, இன்பம், துன்பம் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே மனம் என்னும் நுன்பொருளை கவனமாக கையாள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்