Apr 17

தே.மு.தி.க. வின் பொதுச்செயலராக பிரேமலதாவை நியமிக்க முயற்சி

விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரது மனைவி பிரேமலதாவை கட்சியின் பொதுச்செயலராக்கும் முயற்சியில் தே.மு.தி.. ஆரம்பித்துள்ளது.

தே.மு.தி.., தலைவர் விஜயகாந்த், உடல் நல பாதிப்பால், அவதிப்பட்டு வருகிறார். வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தீவிர சிகிச்சை பெற்றும், பலனில்லை. அதனால், கட்சி பணிகளில், அவரால் தீவிர கவனம் செலுத்த முடியவில்லை.

எனவே, தன் மனைவி பிரேமலதாவை கட்சியின் பொதுச்செயலராக்க விரும்புகிறார். ஆனால், இதுதொடர்பாக ஏற்கனவே எடுத்த முயற்சிக்கு, கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர், ஆட்சேபம் தெரிவித்தனர். அதனால், பிரேமலதாவை, பொதுச்செயலராக்கும் முயற்சி, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த், அந்த திட்டத்தை, மீண்டும் கையில் எடுத்துள்ளார்.