Apr 17

ஐ.பி.எல் திருவிழா மணீஷ் பாண்டே அபாரத்தால் கொல்கத்தா வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது  போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. 

நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் சாம்சன் (39) ரிஷாப் பந்த் (38) ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். 

பின்னர் 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. ஆரம்ப  வீரர்களாக காம்பீர்(14),  கிராண்ட் ஹோம்(01) உத்தப்பா (04) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இந்நிலையில் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே, யூசுப் பதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். யூசுப் பதான் 39 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 59 ஓட்டங்களைப்பெற்று  ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (07) ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 16 ஓட்டங்கள்தேவைப்பட்டது. கிறிஸ் மோரிஸ் வீசிய 19ஆவது ஓவரில் கொல்கத்தா அணி 7 ஓட்டங்களையே  எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

மொகமட் ஷமி மற்றும் மேத்யூஸ் ஆகியோருக்கு ஓவர் இருக்கும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மிஸ்ரா வீசினார். 

முதல் பந்தை தவற விட்ட கிறிஸ் வோக்ஸ் 2ஆவது பந்தில் ஸ்டம் முறையில் ஆட்டமிழந்தார். 

இறுதி  நான்கு பந்தில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் சுனில் நரைன் களம் இறங்கினார்.

3ஆவது பந்தில் ஒரு ஓட்டத்தை அவர் பெற்றுக்கொடுக்க  கடைசி 3 பந்தில் 8 ஓட்டங்கள்; தேவைப்பட்டது. 4ஆவது பந்தை மணீஷ் பாண்டே எதிர்கொண்டார். 

ஆழகான ஆறு ஓட்டத்தைப் பெற்றுக்கொடுத்த அவர் அடுத்த பந்தில் இரண்டு ஓட்டங்கள் அடிக்க கொல்கத்தா அணி 1 பந்து மீதமிருக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மணீஷ் பாண்டே 49 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 69 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காது ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.