Apr 17

ஐ.பி.எல் திருவிழா; புனே வாரியஸ் 27ஓட்டங்களால் வெற்றி

பெங்களுர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிக்களுக்கு இடையிலான 17ஆவது போட் பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களுர் அணித்தலைவர் விராட் கோலி களத்தடுப்பைச் செய்யத் தீர்மானத்தார். 

புனே அணியில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ரகானே (30), திரிபாதி (31) அணித்தலைவர் ஸ்டீபன் ஸ்மித் (27) டோனி (28) ஆட்டமிழந்தனர். 

கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மனோஜ் திவாரி 11 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் புனே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்தது. 

பெங்களுர் சர்hபில் ஸ்ரீநாத் அரவிந்த் மற்றும் மில்னே தலா இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்தனர். 

162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களுர் அணிக்கு அணித்தலைவர் விராட் கோலி(28) டிவில்லியர்ஸ்(29), யாதவ்(18), வொட்சன்(14), பின்னி(18), நிகி(10) என சொற்ப ஓட்டங்களுடன் அடுத்தடுத்து அரங்கு திரும்பவும் அவ்வணி 20ஓவர்களில் 9விக்கெட்டுக்களை இழந்து 134ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

தாகூர், ஸ்ரோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பென் ஸ்ரோக்ஸ் ஆட்ட நாயகனாக தெரிவானார்.