Apr 17

2016 ஆம் ஆண்டில் 415 போலி விசாக்கள், கடவுச்சீட்டுகள் பறிமுதல்

போலி ஆவணங்களுடன் கனடாவிற்குள்  நுழைய   முயற்சித்தவர்களிடமிருந்து,  2016 ஆம் ஆன்டில் 415 போலி விசாக்கள், கடவுச்சீட்டுகள் என்பன கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரக அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத்  தெரியவருகிறது.

இத்தகவல் இவ்வாரம் கனேடியப் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

 போலிப்  பயண ஆவணங்கள், போலி விசாக்கள், போலிக் கடவுச்சீட்டுக்கள் தொடர்பாகவும், இத்தகைய போலிக் கடவுச்சீட்டுகள், விசாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் எவை,  எந்நாடுகளில் இருந்து இவர்கள் கனடாவிற்குப் புறப்பட்டுள்ளனர் போன்ற தகவல்களை பழமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Glen Motz கோரி இருந்தார்.

2016 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட போலிக் கடவுச்சீட்டுகளைப் பொறுத்த வரையில் இந்தியாவே முதலிடம் வகிப்பதாகவும்,  81 இந்திய போலி ஆவணங்கள் இவ்வாண்டில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.