Apr 17

பழமைவாதக் கட்சியின் தலைவர் தேர்வில் மக்சிம் பேர்னியர், கெவின் ஒ’லியரி முன்னிலையில்

கனேடியப் பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் மக்சிம் பேர்னியர் மற்றும் கெவின் ஒ’லியரி ஆகியோர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்புக்கள் , திரட்டப்பட்ட நிதி, ஆதரவு வெளியிட்டோர் போன்ற விபரங்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட பட்டியலில் மக்சிம் பேர்னியர் 19.9 புள்ளிகளோடு முதலிடம் வகிப்பதாகவும்,  கெவின் ஒ’லியரி 17.8 புள்ளிகளோடு இரண்டாம் இடம் வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கான வாக்களிப்பு இரண்டு வாரங்களில் ஆரம்பமாக உள்ளது.  மே மாதம் 27 ஆம் திகதி கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார்.