Apr 17

ஐ.பி.எல் திருவிழா; மும்பைக்கு நான்காவது வெற்றி

ஐ.பி.எல் திருவிழாவின் 16ஆவது போட்டியாக மும்மை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் இடையிலான போட்டிநடைபெற்றது. 

நாணயச் சுழற்றியில்  வென்ற மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா பீல்டிங் தெரிவு செய்தார். 

முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத்துக்கு  பிரண்டன் மெக்கலம் (66), தினேஷ் கார்த்திக் (ஆட்டமிழக்காது 48) என கைகொடுக்க 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைச்  சேர்த்தது.

பின்னர் 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் பார்தீப் பட்டேல், ஜேஸ் பட்லர் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினார்கள். 

ஆட்டத்தின் 2ஆவது பந்தில் பட்டேல் ஓட்டமெடுக்காது வெளியேறினார். பட்லருடன் ராணா ஜோடி சேர்ந்தார். ராணா 36 பந்தில் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்கவும்  அடுத்து வந்த கிரான் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தாh. சேர்த்தார். பட்லர் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் ரோகித் சர்மா ஆட்டமிழக்காது  29 பந்தில் 40 ஓட்டங்களைப் பெறவும் மும்பை இந்தியன்ஸ் 19.3 ஓவரில் 177 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுவரையில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, இது நான்காவது வெற்றியாகும். முதல் போட்டியில் தோல்வியடைந்தபின் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக ராணா தெரிவானார்.