Mar 03

தீர்மானத்தைக் கொண்டுவந்தவர்களே பரிசீலிக்க வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அதற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் நிபந்தனை விதித்து அவற்றை  முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ . சேனாதிராஜா தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் அவகாசம் தேவை என கேட்டுள்ளதாக   தெரிவித்தார்கள்.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று கோரவும் இல்லை. அத்தகைய தீர்மானம் எடுக்கவும் இல்லை. அதை நாங்கள் அறிவிக்கவும் இல்லை.

எடுத்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்காக நிபந்தனை விதிக்கப்பட வேண்டும். ஏற்கனவே 18 மாத காலம் கடத்தப்பட்டுள்ளது. ஒரு சில விடயங்களில் சிறு சிறு முன்னெற்றம் நடைபெற்றுள்ளது.

 ஆனால் பல விடயங்கள் ஏமாற்றமே எங்களுக்கும் எமது மக்களுக்கும் கிடைத்துள்ளது என்று  நாம் தெ ளிவாக கூறினோம்.ஆகையால் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா. மனித உரிமை பேரவை பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் வல்லமை நாடுகளுடன் கூட்டமைப்பு பேசி மனித உரிமைப் பேரவையில் திர்மானங்கள் எடுத்தது.

ஆகையால் மனித உரிமை பேரவையில் இலங்கையின் அனுசரணையுடன் அங்கம் வகிக்கும் நாடுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில்பரிசீலிக்க வேண்டும்.

மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு  பல விதமான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக ரீதியில் உரித்து உண்டு.

ஆனாலும் நாங்கள் ஒன்றுபட்டு தீர்மானங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.