Sep 27

குர்திஷ்தான் பொதுவாக்கெடுப்பும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டமும் - சுதன்ராஜ்

மானிட சமூகத்தின் மனித உரிமைகளைப் பேசு பொருளாக கொண்ட ஐ.நா மனித உரிமைச்சபையின் 36வது கூட்டத்தொடர், இறுதி நாட்களை எட்டியிருக்கும் இவ்வாரத்தில், குர்திஷ்தான் இன மக்கள் தமது அடிப்படை மனிதஉரிமையொன்றினை பொதுவாக்கெடுபபு; ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

எந்தவொரு இனக்குழுமமும் தான் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ விரும்புகின்றோம் என்பதனைவெளிப்படுத்துவது என்பது அம்மக்கள் கூட்டத்தின் அடிப்படை அரசியல் உரிமையாக இருக்கின்றது.

அந்தவகையில் குர்திஷ்தான் இன மக்கள் 'தனிநாட்டுக்கான' தமது அரசியல் விருப்பினைபொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் இவ்வாரம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இது கடுமையான அதிர்வலைகளை உலக அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளமை ஒருபுறமிருக்க, மறுபுறம்அரசியல் உரிமைக்காக போராடி வரும் அரசற்ற இனங்களுக்கு இது உற்சாகத்தினைக் கொடுத்துள்ளது.

இதனைத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்வெளிக்காட்டுகின்றது.

தமிழீழம் உள்ளடங்கியதான அனைத்து தீர்வுத் திட்டங்களையும் உள்ளடக்கி, தங்களது அரசியல் எதிர்காலம்குறித்து, அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் ஈழத் தமிழ்மக்களிடத்தில்

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாக உள்ளதென பிரதமர் வி.உருத்திரகுமாரன்அவர்கள் தெரிவிக்கின்றார்.

தமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடயேயும்,தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும்இப்பொது வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆனால் இதற்கு நேர்மாறாக சிறிலங்கா அரசாங்கம் இவ்வாரம் வெளியிட்டுள்ள புதிய அரசியல்அமைப்பின் இடைக்கால வரைவு அமைந்துள்ளது.

சிங்கள பௌத்த மேலாண்மையினை உறுதிப்படுத்தும் இந்த இடைக்கால வரைவு ஒற்றையாட்சி என்ற அரசியல்ஏற்பாட்டின் கீழ் மாகாண அலகுகள் குறித்தே பேசியுள்ளது.

மாறாக இலங்கைத்தீவின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக தமிழர்களின் அரசியல் விருப்பங்களை உள்வாங்கியதிட்டவரைவாக இது அமைவில்லை என்பது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது கருத்துவெளிப்படுத்துகின்றது.

'அரைகுறைத் தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்தாகாது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்காலஅறிக்கை தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்தையே எமக்கு ஏற்படுத்தியுள்ளது' என அவர்தெரிவிக்கின்றார்.

இடைக்கால வரைறிக்கையில் முக்கியமாக :

பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு என்பதை சிங்களப் பதமான “ஏகிய இராஜ்ஜிய” நன்குவிபரிக்கப்படுகிறது. இது தமிழ் மொழியில் “ஒருமித்த நாடு” என்பதற்கு சமனாகும்.

இத்தகைய சூழமைவுகளில் பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்.சிறிலங்கா (இலங்கை), அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டவாறு தத்துவங்களைப் பிரயோகிப்பதற்குஏற்புடையதான மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள சுதந்திரமும் இறைமையும்தன்னாதிக்கமும் கொண்டுள்ள 'ஏகிய இராஜ்ஜிய' ஒருமித்த நாடு எனும் குடியரசாகும்.

இந்த உறுப்புரையின் 'ஏகிய இராஜ்ஜியம்' ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும்பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளாகும். அத்துடன், அரசியலமைப்புக்கான திருத்தம் அல்லதுநீக்கம் அல்லது மாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதமாகபாராளுமன்றத்தினாலும் இலங்கை மக்களாலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

சிறிலங்கா அரசு “பிரிக்கப்படாததது மற்றும் பிரிக்கப்பட முடியாதது” என அரசியலமைப்புகுறிப்பிட்டுக் கூறுதல் வேண்டும்.

“எந்தவொரு மாகாண சபை அல்லது ஏனைய அதிகாரசபை, இலங்கையின் ஆள்புலத்தின் எந்தவொரு பகுதியையும்

தனி நாடொன்றாகப் பிரகடனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன்பகுதியையோ, இலங்கையிலிருந்து பிரித்துத் தனியாக்குவதற்காக ஆதரித்து வாதாடவோ அல்லது நடவடிக்கைகளைமேற்கொள்ளவோ கூடாது”.

இவ்வாறு நீண்டு செல்லும் இடைக்கால வரைவு நீண்டு செல்கின்றது.இவ்விடத்தில் குர்திஷ்தான் மக்களது அரசியல் உரிமைக்கான பொதுவாக்கெடுப்பை மையப்படுத்தி,இலங்கைத்தீவின் இனநெருக்கடி விவகாரத்தினை இங்கு பொருத்திப் பார்க்கலாம்.

ஒரு தனித்துவமான இனக்குழுவாக இருக்கும் குர்திஷ்தான் மக்கள் ஈராக், சிரியா, துருக்கி மற்றும் ஈரான்நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். மத்திய கிழக்கில் நான்காவது மிகப்பெரிய இனக்குழுவாக இருக்கும்இவர்கள் அரசற்ற ஒரு இனமாக உள்ளனர்.

தற்போது குர்திஷ்தானியர்கள் தமது தனிநாட்டுக்கான அரசியல் விருப்பினைபொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் வெளிக்காட்டியிருந்த வேளை, 'இது ஈராக்கின் ஒருமைப்பாட்டுக்குஎதிரானது என்பதோடு அரசியல் அமைப்புக்கு எதிரானது' என ஈராக்கிய மத்திய அரசுதெரிவித்துள்ளது.

ஈராக்கின் இக்கருத்தினை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கின்ற 'ஒற்றையாட்சி, ஒருமைப்பாடு' ஆகியவிடயங்களோடு ஒப்பீடு செய்யலாம் என்பதோடு, பிரிந்து செல்வதற்கான அரசியல் ஏற்பாடு என்பதுஅரசியல் அமைப்புக்கு எதிரானது எனவும் கூறுகின்றது.

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் அமைப்பின் 6வது திருத்தச்சட்டம் 'தனிநாடு' பற்றிபேசுவதையே ஒரு குற்றமாக கொள்வதானது, கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை மனித உரிமை மீறலாகவேஇருக்கின்றது.

இது சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களுக்கும் எதிரானதாக மட்டுமல்லாது, சர்வதேச குடியியல், அரசியல்பிரகடனத்தின் 18 மற்றும் 19 ஆவது பிரிவுகளில் உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரம்,பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றை மீறுகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடுகின்றது.

சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களை உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளாகவைத்திருப்பதற்கான சிறிலங்காவின் சட்ட ஏற்பாடாகவே இது இருப்பது போல்தான்,குர்திஷ்தானியர்களின் தனிநாட்டுக்கான அரசியல் விருப்பு என்பது ஈராக்கின் அரசியல்அமைப்புக்கு எதிரானதென கூறும் ஈராக்கிய அரசின் எண்ணமும் உள்ளது.

ஆனால் இவற்றையெல்லாம் கடந்து தற்போது குர்திஷ்தானியர்களின் பொதுவாக்கெடுப்பினை நடாத்திமுடித்திருப்பது போல், ஈழத்தமிழர் தேசமும் பொதுவாக்கெடுப்பொன்றினை நோக்கி நகர்வதுதான்சரியான வழியாக இருக்கும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் கூறுகின்றார்.

இதனைத்தான் புலம்பெயர் தேசங்களில் இயங்குகின்ற பல தமிழர் அமைப்புகள் மட்டுமல்ல, தமிழகஅரசியல் தலைவர்களும் குறிப்பிடுகின்றனர்.

தற்போது புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால வரைவினை சிறிலங்கா வெளிப்படுத்தி இருக்கின்றநிலையில், இது தொடர்பில் பங்காளிக் கட்சிகள், மற்றும் தமிழ் புலமையாளர்களுடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சந்திப்புக்களை நடத்த இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா அவர்கள்தெரிவித்துள்ளார்.

மறுபுறம் தமிழீழ அரசுக்கான யாப்பு வரைவுக்கான அரசமைப்பு செய்நுட்ப குழு புலம்பெயர்தேசங்களில் மக்கள் சந்திப்புகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு எழுச்சி அரங்கில், மெய்ந்நிகர் தமிழீழ அரசாங்கசெயன்முறை வடிவில், தமிழீழ அரசுக்கான யாப்பு வரைவவது தொடர்பில் பன்னாட்டு வளப்பெருமக்களுடன்விவதாதித்து அரசமைப்பு செய்நுட்ப குழுவொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கி இருந்தது.

சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் யாப்பினை எழுதுவதற்கான இம்முயற்சி தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையின் குறியீடாக அமையும் அதேவேளை, தமிழீழத்தனியரசினை அமைப்பதற்கான போராட்டத்தில் அனைத்துலகிலும் வாழும் தமிழ்மக்களையும் பங்காளர்களாகஇணைக்கும் முயற்சியாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்செயல்முனைப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துரையில், தமிழீழத் தனியரசு உருவாகுவதுஉடனடியாக நடைமுறைச் சாத்தியம் இல்லாதுவிடினும், தமிழீழ மக்களுக்கான சுதந்திரமும் இறைமையும் கொண்டதமிழீழத் தனியரசு உருவாகுவதற்கான நிலைமைகள் இன்னும் இருக்கின்றன என்ற கருத்தை நாங்கள்கொண்டிருக்கிறோம்.

இதனால் தமிழீழத் தனியரசு எவ்வாறு உருவாக வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை மேற்கோள்வதுஅவசியமானது என நாம் கருதுகிறோம். நாம் உருவாக்கவுள்ள தமிழீழத்தின் அரசியல் யாப்பு இதற்குத்துணைபுரியும்.

தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கு அனைத்துலக அங்கீகாரம் பெறுவதும், அந்தஅங்கீகாரத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும்உறுதிப்படுத்துக்கூடிய இறைமை கொண்ட சுதந்திரத் தனிரயசு ஒன்றினை, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாகஅடைந்து கொள்வதும் முக்கியம் பெறுகிறது.

இலங்கைத்தீவில் தேசங்கள் அங்கீகரிக்கப்படுவதும், தேசியப்பரிச்சினைக்கு இரு அரசுகள் என்ற தீர்வுஎட்டப்படுவதும்தான், இலங்கைத்தீவில் வாழும் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் சமாதானதாகவும்ஒருமைப்பாட்டுடனும் வாழ வழி சமைக்கும் என உறுதியாக நம்புகிறோம்.

தென்னாசியப் பிராந்தியத்தின் அமைதிக்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் சுபீட்சத்துக்கும்,இரு அரசுகள் தீர்வு துணை செய்யும்.

எமது இந்த நிலைப்பாட்டை தற்போது அனைத்துலக அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, எமதுதொலைநோக்கை நாம் கைவிட முடியாது என கூறப்பட்டுள்ளது.சிங்கள பௌத்த மேலாண்மையினை இலங்கைத்தீவில் கைக்கொண்ட வாறு, தனது புதிய அரசியல் அமைப்பின்இடைக்கால வரைவினை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஈழத்தமிழர்கள்பொதுவாக்கெடுப்பு நோக்கி நகர்வதும், தமக்கான அரசியல் யாப்பினை வரைவதும் இவ்வாரத்தில்ஒற்றைப்புள்ளியில் சந்திக்கின்ற சங்கதிகளாக உள்ளன.