Mar 03

வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஆரம்பிக்க திட்டம்

வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தலைவர் உபுல் ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் தற்போது பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்ட வண்ணமுள்ளன. ஹோட்டல்கள் அதிகளவில் கொழும்பு நகரில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

ஜேர்மன் , இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ,ஐப்பான் ஆகிய நாடுகள் பல்வேறு விதமான முதலீடுகள் செய்ய திட்டமிட்டுள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புகள்  ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளன.

இவ்வருடம் ஜப்பான் நிறுவனமொன்றின் முதலீட்டை கொண்டு வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.   

கந்தளாய் சீனி தொழிற்சாலை செயற்பாடுகள் மூன்று நாடுகளின் கூட்டு பங்காண்மையின் கீழ் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன.

அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கைத்தொழில் பேட்டை வலயத்திற்கான பணிகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கினால் தாமதம் அடைந்துள்ளன என்றார்.