Apr 15

அடுத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்குமா?

ஜப்பானைச் சேர்ந்த 6 வயது ரிக்கி குரங்கு மிகப் பிரமாதமாக டென்னிஸ் விளையாடுகிறது. டென்னிஸ் உடையணிந்து, இரண்டு கால்களால் நிமிர்ந்து நின்று, டென்னிஸ் மட்டையால் அநாயாசமாகப் பந்தை அடித்து விளையாடுகிறது.

பந்து உயரமாகச் செல்லும்போது தரையிலிருந்து எம்பிக் குதித்து, பந்தை லாவகமாக அடிக்கும் காட்சி ஆச்சரியப்படுத்தி விடுகிறது. விளையாடி முடித்த பிறகு, பயிற்சியாளர் ‘குட் ஜாப்’ என்று பாராட்டியவுடன் அவரது தோள்களில் தட்டிக் கொடுக்கும்போது எல்லோரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிடுகிறது ரிக்கி.

டென்னிஸ் விளையாடும் வீடியோ வெளியிட்ட 6 மணி நேரத்தில் 3 லட்சம் முறை பார்க்கப்பட்டிக்ருகிறது!