Sep 23

சட்டவிரோதமான வாள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குறிஞ்சாக்கேணி 4 ம் வட்டாரத்தில் சட்டவிரோத வாள் ஒன்றுடன் பயணம் மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரையும் கிண்ணியா சூரங்கள் சாந்தி நகரில் 20 கிராம் கேரளா கஞ்சாவுடன் 26 வயது இளைஞர் ஒருவரையும் திருகோணமலை பிராந்திய விஷத்தன்மை போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களையும் பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் முகமாக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.