Sep 22

சுவிஸ் சாலை விபத்துக்களில் 109 பேர் பலி

சுவிட்சர்லாந்து நாட்டில் இந்தாண்டு தொடக்கம் முதல் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் சிக்கி 109 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சுவிஸில் சாலை விதிகளை பின்பற்ற கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

எனினும், ஒவ்வொரு ஆண்டும் நிகழும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சுவிஸ் போக்குவரத்து துறை அலுவலகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் நாடு முழுவதும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட கூடுதலாக அதிகரித்து வருகிறது.

ஜனவரி முதல் தற்போது வரை சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் நபர்களில் 15 மற்றும் 24 வயதுடைய வாலிபர்களே அதிகம்.

பனிப்பொழிவு, மற்றும் மழை பொழியும் தினங்களில் அதிகளவில் சாலை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

விதிமுறைகளை மீறி அசுர வேகத்தில் ஓட்டியதால் வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. சாலை விதிகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும் இவ்விபத்துக்களுக்கு காரணம்.

சுவிஸில் 17 வயதுடைய நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் அளிக்கும்போது அவர்களுக் சாலை விதிகளை முற்றிலுமாக தெரிந்துக்கொண்டனர் என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை வெளியிட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.