Sep 22

உலகின் அழகான சிறுமி இவர் தானாம்... இவர் யாருடைய மகள் தெரியுமா..?

உலகின் அழகான சிறுமி என்று கூறப்பட்ட தைலேன் பிளாண்ட் முதல் முறையாக பேஷன் வீக்கில் கலந்து கொண்டார்.

தைலேன் பிளாண்ட் முதல் முறையாக தனது 4வது வயதில் மாடலாக அறிமுகமானார். பின்னர் பிரன்ச் வோக் பத்திரிகையில் அவரது புகைப்படம் இடம்பிடித்தது.

தனது டீனேஜ் வயதை எட்டாத நிலையிலேயே அவர் உலகின் மிக அழகான சிறுமி என்ற பெயரை பெற்றார்.

தற்போது தைலேன்னுக்கு 16 வயதாகிறது. உலகில் புகழ்பெற்ற நிறுவனமான மைகேல் கோர்ஸ் நியூயார்கில் நடத்திய பேஷன் ஷோவிலும் லண்டனில் டாமி ஹில்பிகர் நடத்திய ஷோவிலும் தைலேன் கலந்து கொண்டார்.இது இவர் கலந்து கொண்ட முதல் பேஷன் ஷோவாகும். தற்போது ஐஎம்ஜியின் லோரியால் பொருட்களுக்கு விளம்பர தூதராகவும் தைலேன் ஒப்பந்தமாகி உள்ளார்.

முன்னாள் கால்பந்து வீரர் பேட்ரிக் பிளான்ட் மற்றும் பிரென்ச் நடிகை வெரோனிகா லைப்ரியின் மகளான தைலேனை 1.6 பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். 16 வயதே ஆன நிலையில் பேஷன் உலகில் இவர் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.