Sep 22

ரூ.23,000 தள்ளுபடியுடன் ஐபோன் 8 முன்பதிவு இந்தியாவில் துவங்கியது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் 3 சாதனங்கள் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஆப்பிள் அறிவித்தப்படி இந்தியாவில் முன்பதிவு துவங்கியுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் முன்பதிவு இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்தியாவில் 64 ஜிபி ஐபோன் 8 விலை ரூ.64,000 முதல் துவங்கி, 246 ஜிபி ஐபோன் 8 பிளஸ் விலை ரூ.86,000 என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபோன்களை வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். 

புதிய ஐபோன்களின் விநியோகம் செப்டம்பர் 29-ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.23,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.

அமேசான் தளத்தில் கேஷ்பேக், எக்சேஞ்ச் மற்றும் வட்டியில்லா தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் 3 விலை ரூ.29,990 முதல் துவங்குகிறது. பிளிப்கார்ட் தளம் மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் 3 பில்ட்-இன் செல்லுலார் கனெக்டிவிட்டி, மெசேஜஸ் மற்றும் சிரி வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் 3 ஆப்பிள் ஏர்பாட்ஸ் உதவியுடன் பாடல்களை இசைக்கும் திறன் கொண்டுள்ளது.

புதிய ஐபோன் 8 சீரிஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் திரை கொண்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களில் வழங்கப்படாத அளவு ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் அதிக உறுதியான ஹோம் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன் முன்பை விட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.

ஆப்பிள் A11 பயோனிக் சிப் கொண்டுள்ள புதிய ஐபோன் 8 சீரிஸ் இதுவரை வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ஐபோன் ஆகும். இத்துடன் இவை முந்தைய ஐபோன்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்டிக்கிறது. இத்துடன் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமராவும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் 8 கேமராக்கள் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் ஐபோன் 8 சீரிஸ் எந்த ஸ்மார்ட்போனும் வழங்காத அளவு துல்லியமான வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.