Mar 03

தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்

இலங்கை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ,

இந்திய மீனவர்கள் 13 பேர் 2-3-2017 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.

மீனவர்கள் மற்றும் அவர்களின் படகை தலைமன்னார் கொண்டு சென்றதாக தகவல் வந்துள்ளது. பாக் நீரிணை பாரம்பரிய கடற்பகுதியில் நமது மீனவர்களை தொடர்ந்து சிறைப்பிடித்து செல்வது, தமிழக மீனவர்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே 35 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, அவர்களின் 120 படகுகளும் இலங்கை வசம் உள்ள நிலையில், இப்போது மேலும் 18 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறைகளில் உள்ள 53 மீனவர்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளையும் விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றுள்ளது.