Mar 03

கலப்பு நீதிமன்றத்திற்கு மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை


கலப்பு நீதிமன்ற கட்டமைப்பினை எமது நாட்டினுல் நிறுவுவது சாத்தியப்படாது. அதனை நிறுவேண்டுமாயின் பொது வாக்கெடுப்புக்குச் சென்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும்.


ஆகவே மாற்று முறையாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை விரைவில் நிறுவவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

சட்ட வாரத்தினை முன்னிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட  பிரதமர்,

 

தற்போது சுயாதீன ஆணைக்குழுக்களும் நீதிமன்ற கட்டமைப்பும் அதன் பணிகளை சிறப்பாகவும் சுதந்திரமாகவும் முன்னெடுத்து வருகின்றன. தற்போது நாம் புதியதொரு நீதியரசரை தேர்வு செய்துள்ளோம் அவரின் பணிகளும் சிறப்பாக அமைய வேண்டும் என்று வா ழ் த்துகின்றோம்.

 

 கலப்பு நீதிமன்ற கட்டமைப்பினை எமது நாட்டினுல் நிறுவுவது சாத்தியப்படாது. கலப்பு நீதிமன்றத்தினை நிறுவேண்டுமாயின் பொது வாக்கெடுப்புக்குச் சென்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையினை பெற வேண்டியிருக்கும் வேண்டியிருக்கும்.இந்த நிலைப்பாட்டினை உரிய தரப்புக்களிடத்தில் வலியுறுத்தியுள்ளேன்.


எனவே கலப்பு நீதி மன்றத்திற்கு மாற்று முறையாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை விரைவில் நிறுவவுள்ளோம் மேற்படி கலப்பு நீதிமன்ற கட்டமைப்பினை நாம் நிறுவ முற்பட்டால் அதற்காக பொது வாக்கெடுப்பொன்றினை நடத்த வேண்டியிருக்கும்.