Sep 20

சுதேச வைத்திய நிலை­யங்­க­ளுக்கு மூலி­கை­களை வழங்க ஒழுங்கு

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள சுதேச வைத்திய நிலை­யங்­க­ளுக்கு ஒரு வரு­டத்­துக்குத் தேவை­யான மூலிகை வகை­களை உற்­பத்தி செய்கை செய்து வழங்­க­­வுள்­ள­தாக மாகாண சுதேச வைத்தியத் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

வடக்கு மாகா­ணத்­தில் சுதேச வைத்தியத் திணைக்­க­ளத்­துக்குச் சொந்­த­மான 7 மூலி­கைத் தோட்­டங்­கள் உள்­ளன. யாழ்ப்­பா­ணத்­தில் 3 தோட்­டங்­க­ளும், வவு­னியா, மன்­னார், கிளி­நொச்சி மற்றும் முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளில் தலா ஒரு தோட்­டமும் உள்­ளன.

இவற்­றில் குறிப்­பிட்ட அளவு மூலி­கை­கள் செய்கை செய்து சுதேச வைத்திய நிலை­யங்­க­ளுக்கு விநி­யோக்­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன.
எனி­னும், சுதேச வைத்தியம் சார்ந்த ஏனைய நிலை­யங்­க­ளுக்­கும் மூலி­கை­கள் தேவை­யாக உள்­ளன.

அதற்­க­மை­வாக மூலி­கைத் தோட்­டங்­க­ளில், சுதேச வைத்திய நிலை­யங்­க­ளின் தேவைக்கு ஏற்ப ஒரு­வ­ரு­டத்துக்குத் தேவை­யான மூலி­கை­கள் செய்கை செய்து விநி­யோ­கிக்­கப்­ப­ட உள்ளன. இதற்­கான நீண்­ட­கால செயற்றிட்­டம் ஒன்றை நடை­மு­றைப்­ப­டுத்த ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

தற்­போது யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் புத்­தூர், நவக்­கிரி மற்­றும் திரு­நெல்­வேலி ஆகிய பிர­தே­சங்­க­ளில் அதி­க­ள­வான மூலிகை இனங்­கள் உள்­ளன.

அங்­கி­ருந்து ஏனைய மாவட்­டங்­க­ளுக்கு மூலி­கை­களை அறு­வடை செய்து வழங்­கும் செயற்­பா­டும் தற்­பொ­ழுது நடை­பெற்று வரு­கின்­றது. வடக்கு மாகா­ணத்­தில் உள்ள மூலி­கைத் தோட்­டங்­க­ளில் குறித்த ஒரு மூலிகை இனத்தை அதி­க­ள­வில் பயி­ரிட்டு, அதனை அனைத்து சுதேச வைத்திய நிலை­யங்­க­ளுக் கும் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளது – என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.