Sep 20

தினமும் ஹெட்செட் பயன்படுத்துபவரா..? இத ஒரு முறை படிங்க!!!!

நிரூபிக்கப்பட்ட சில ஆய்வுகள், ஹெட்செட் பயன்படுத்தி அதிக ஒலியுடன் தொடர்ச்சியான முறையில் பாடல்களை கேட்பது நிரந்தரமான காதுகேளாமை சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றன.

இருப்பினும், இளம் குழந்தைகள் தொடங்கி இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான பாடல்களை, ஹெட்போன் பயன்பாடு கொண்டு கேட்பதை அனுதினமும் காண முடிகிறது.

மேன்மையான முறையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் இசை கேட்பதென்பது மிகவும் நல்லது என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

அவ்வாறான இசையானது, மனநிலையை மேம்படுத்தும், கடுமையை தளர்த்தி ஓய்வெடுக்க உதவும். ஆனால், மென்மையான இசை கேட்பதிலும் கூட ஒரு மாபெரும் சிக்கல் இருக்கிறது.

அது தான் ஹெட்செட் பகிர்தல்.!

உங்கள் ஹெட்செட்களை பகிர்ந்து கொள்ளும் போது, முற்றிலும் மாறுபட்ட புதிய பிரச்சனைகள் நிறைந்த் ஒரு உலகிற்குள் நீங்கள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதென்ன பிரச்சனைகள்.? என்னென்ன சிக்கல்கள்.?

வெளி காதின் கால்வாய் பகுதிகளில்..

பொதுவாக நீங்கள் பூனை அல்லது நாய்களின் காதுகளில் பூச்சிகள் இருக்குமென்பதை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இந்த தொல்லைதரும் சிறிய பிராணிகள், தோலின் மேற்பரப்பில், வெளி காதின் கால்வாய் பகுதிகளில் வாழ்கின்றன.

உங்கள் காதுகளுக்குள்ளும் காதோர பூச்சிகள்.!

இந்த சிறிய பூச்சிகள் வழக்கமாக விலங்குகளிடத்தில் காணப்பட்டாலும், அவை மனிதனின் காதுகளுக்குள்ளும் செல்கின்றன. செல்லப்பிராணிகளோடு உறங்கும் பழக்கம் கொண்டவர்களின் காதுகளில் இவைகளை எளிதாக காணமுடிகிறது. ஆக எக்காரணத்தை கொண்டும் செல்லப்பிராணிகளோடு உறங்கும் நபர்களுடைய ஹெச்செட்தனை பயன்படுத்த வேண்டாம். இல்லையெனில் நீங்களே உங்கள் காதுகளுக்குள்ளும் காதோர பூச்சிகள் நுழைய விடுவீர்கள்.

காதுகளுக்குள் கரப்பான் பூச்சிககளின் முட்டைகளும்;

குட்டிகளும்.! கேட்பதற்கு நடக்காத ஒரு காரியமாக தோன்றலாம். ஆனால், ஒரு நபரின் காதுகளுக்குள் காதோர பூச்சிகளை காண்பதை விட கரப்பான் குட்டிகளை காண்பது மிகவும் பொதுவானவை என்பதே நிதர்சனம். நிச்சயமாக, ஒரு பெரிய கரப்பான் பூச்சியை உங்கள் ஹெட்செட்டில் காணும் போது அதை காதுகளுக்குள் நீங்கள் திணிக்கப்போவதில்லை. ஆனால், ஹெட்செட்களுக்கு கரப்பான் முட்டைகள் இருப்பின்.??

மிக ஆழமான சுத்தம் அவசியம்.!

ஆக, மிக நீண்ட காலம் பயன்படுத்தாத ஹெட்செட்டை வெறுமனே தூசி தட்டினால் மற்றும் பற்றாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிக ஆழமான சுத்தம் அவசியம். முடிந்தால் இயர்பட்ஸ்தனை கழட்டி சுத்தம் செய்யலாம்; அதேசமயம் பிறரின் பழைய ஹெட்செட்களை வாங்கி பயன்படுவதையும் முற்றலும் தவிருங்கள். ஏனெனில் சில விடயங்களை சுத்தம் செய்தாலும் கூட பயன் தராது.

காதோர பூஞ்சை (பங்கஸ்)

எப்போதாவது நீங்கள் காது வலியை உணர்ந்தது உண்டா.? உணர்ந்திருந்தால், அது எவ்வளவு இறுக்கமானதொரு நிகழ்வென்பதை நன்கு அறிந்திருப்பீர்கள். சுமார் ஏழு சதவிகிதம் பேர் தங்கள் காதுகளில் பூஞ்சைக் கொண்டிருக்கிறார்கள்.

ஜலதோஷத்தை போலவே பரவும்.!

முதலில் காதுகளை சுத்தமாக வைத்திருக்கவும் அடுத்தபடியாக எக்காரணத்தை கொண்டும் பிறரின் ஹெட்போன்களை வாங்கி பயன்படுத்த வேண்டாம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் – ஒரு சாதாரண ஜலதோஷத்தை போலவே காதுகளுக்கு இடையே பூஞ்சைகளும் பரவும். ஹெட்செட்தனை பகிர்ந்து கொள்வதொன்றும் மிகப்பெரிய தவறல்ல. அதேசமயம் நியாப்படுத்தும் அளவு அது நிச்சயம் சரியானதும் அல்ல.!