Sep 20

அமேசானில் மொபைல்களுக்கு 3 நாள் மெகா சலுகை

அமேசான் கிரேட் இந்தியன் சேல் சிறப்பு விற்பனையில் மொபைல்போன்களுக்கு ஏராளமான அதிரடி சலுகைகள் காத்திருக்கின்றன.

அமேசான் நிறுவனம் கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் செப்டம்பர் 21 (நாளை) முதல் செப்டம்பர் 24 வரை பல்வேறு சலுகைகளை அளிக்க உள்ளது. அதன் ஒரு பகுதியாக, மொபைல் போன்களுக்கு நம்ப முடியாத அளவிற்கு சலுகைகள் அளிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 (Redmi Note 4), ரெட்மீ 4ஏ (Redmi 4A) ஆகிய மொபைல்களுக்கு அதிரடி சலுகை அளிக்கப்படுகிறது. சியோமி மீ மேக் 2 மொபைலுக்கும் மெகா சலுகை இருக்கிறது. ஆப்பிள், சாம்சங் மொபைல்களின் புதிய மொபைல்களும் விற்பனைக்கு வருகின்றன. மோட்டோ, சோனி, எல்.ஜி., பானாசானிக் ஆகிய நிறுனவங்களின் பல பிரபல மொபைல்களுக்கும் சூப்பர் தள்ளுபடி காத்திருக்கிறது.

இந்த மூன்று நாட்களில் 40 சதவீதம் வரை மொபைல்கள் விலை குறைவாக விற்கப்படும் என்று கூறப்படுகிறது. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளராக இருந்தால் இன்றே இச்சலுகைக் காலம் தொடங்கும். அதாவது நான்கு நாட்களுக்கு ப்ரைம் வாடிக்கையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.